கோப்புப் படம் 
இந்தியா

உ.பி.யில் கனமழை: ஒரேநாளில் 19 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

DIN

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

உ.பி.யில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 4 பேர் மின்னல் பாய்ந்தும், இருவர் நீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர். 

ஹர்டோயில் 4 பேர், பாரபங்கியில் 3 பேர், பிரதாப்கர் மற்றம் கன்னோஜ் பகுதியில் தலா இரண்டும், அமேதி, தியோரியா, ஜலான், கான்பூர், உன்னாவ், சம்பால், ராம்பூர் மற்றும் முசாபர் நகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை இடைவிடாத கனமழை பெய்ததால், குறிப்பாக மாநிலத்தின் மத்திய பகுதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT