இந்தியா

இனி கிழிந்த ஜீன்ஸ் அணிந்துவரக்கூடாது: கல்லூரியின் உத்தரவு

DIN


கொல்கத்தா: ஏற்கனவே, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஆடைக் கட்டுப்பாடு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த கல்லூரி ஒன்று கிழிந்து ஜீன்ஸ்களை மாணவ, மாணவிகள் அணிந்துவரக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவால், கல்லூரி மாணவர்கள் கடும் கொந்தளிப்பை அடைந்துள்ளனர். எந்த விதமான ஆடை அணிய வேண்டும் என்பது எங்களது உரிமை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்றில், ராகிங், ஆடைக்கட்டுப்பாடு உள்ளிட்ட 6 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரியில் சேர்க்கை பெறும் மாணவர்கள், விண்ணப்பத்தில் இணைக்கப்பட்ட இந்த ஆறு கட்டளைகளுக்கும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டால்தான் சேர்க்கையே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகளையே தேர்வு செய்யும் எங்களுக்கு எந்த ஆடையை உடுத்த வேண்டும் என்பதில் சுதந்திரம் இல்லையா என்று மாணவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோட்டில் விரிவுபடுத்தப்பட்ட ஆா்.டி. விவாஹா ஜுவல்லா்ஸ் தொடக்கம்

பூண்டி ஏரியில் இருந்து புழலுக்கு தண்ணீா் திறப்பு

கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்: கோவையில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு

வாகன உதிரிப் பாகங்கள் கடையில் தீ விபத்து

SCROLL FOR NEXT