இந்தியா

ஆப்பிள் ஐஃபோன் 15 சீரிஸ்களின் விலை என்ன? முன்பதிவு எப்போது?

ஆப்பிள் ஐஃபோன் 15 மாடல் ஸ்மார்ட்ஃபோன்களின் விலை மற்றும் முன்பதிவு தேதி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன. 

DIN

ஆப்பிள் ஐஃபோன் 15 மாடல் ஸ்மார்ட்ஃபோன்களின் விலை மற்றும் முன்பதிவு தேதி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 15 மாடல் நேற்று(செப். 12) ஆம் தேதி சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 

ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஃபோன் 15 சீரீஸில் ஐஃபோன் 15, ஐஃபோன் 15 பிளஸ், ஐஃபோன் 15 ப்ரோ, ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் உள்ளன. 

ஐஃபோன் 15 மாடல் ரூ. 79,900 -க்கும், ஐஃபோன் 15 பிளஸ் ரூ. 89,900-க்கும், ஐஃபோன் 15 ப்ரோ மாடல் ரூ. 1,34,900-க்கும், ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ. 1,59,900 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் முன்பதிவு செய்யலாம். செப். 22 ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்படுகிறது. 

இதில் மிகவும் பிரகாசமான டிஸ்பிளே, 48 மெகா பிக்சல் கேமரா, மறுசுழற்சி செய்யக்கூடிய நவீன பேட்டரிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. கிராபிக்ஸ், மொபைல் கேமிங் ஆகியவற்றுக்கு சிறந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள் நிறுவனங்களின் சார்ஜிங் போர்ட்டர்களுக்கு பதிலாக, ஐஃபோன் 15 மாடல்களில் டைப்-சி சார்ஜிங் போர்ட்டர் உள்ளது. 

தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது 7% ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் தயாரிக்கிறது. 2025ல் இதனை 25% ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - கமல் படத்தின் அறிவிப்பு! இயக்குநர் யார்?

தவெகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர்

ஜன நாயகனின் ராவண மவன்டா பாடல்!

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% அதிகரிப்பு!

உத்தரப் பிரதேசம்: பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரைக் கொன்ற இளம்பெண் கைது!

SCROLL FOR NEXT