இந்தியா

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் பெற்றோர் ஆந்திர கோயிலில் வழிபாடு!

ஆந்திர மாநிலத்தின், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடாலயத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் பெற்றோர் வழிபாடு செய்தனர். 

DIN

ஆந்திர மாநிலத்தின், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடாலயத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் பெற்றோர் வழிபாடு செய்தனர். 

ரிஷி சுனக்கின் பெற்றோரான யஷ்வீர் சுனக் மற்றும் ஊஷா சுனக், மாமியார் சுதா மூர்த்தி ஆகியோர் மந்திராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோயிலில் வழிபாடு செய்தனர். அவர்களுடன் இன்ஃபோசிஸின் ஸ்ரீமதி சுதா நாராயண மூர்த்தியும் வந்திருந்தார். அவர்களுக்கு கோயில் சார்பில் ஸ்ரீஸ்வாமிஜி வஸ்திரம், கயிறு, நினைவுப் பரிசையும் வழங்கினார். 

இதனை ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள தலைநகர் தில்லிக்கு வந்த ரிஷி சுனக், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி பிரசித்தி பெற்ற அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் முதல்முறை... வரலாறு படைத்த லோகா!

வாழ்க்கை - வேலை சமநிலைப்படுத்த திணறுகிறீர்களா? இதோ டின்டிம் பென்குயின் பற்றிய கதை!

பாலியல் வன்கொடுமை: காவலர்களுக்கு 2 மடங்கு தண்டனை தர வேண்டும் - ராமதாஸ்

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்! - முதல்வர் ஸ்டாலின்

வைல்டு ஃபயர்... ஜனனி!

SCROLL FOR NEXT