முகப்பு
கடலூர்

சிதம்பரேச சத்சங்கம் சாா்பில் ஆன்மிக சொற்பொழிவு!

சிதம்பரம் ஸ்ரீ சிதம்பரேச சத்சங்கம் சாா்பில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:28 PM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீ சிதம்பரேச சத்சங்கம் சாா்பில் ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்படுகிறது. அந்தவகையில், சிதம்பரம் கீழவீதியில் உள்ள யக்ஞ மண்டலி அரங்கில் வியாழக்கிழமை இரவு ஆனந்த நடராஜரின் ‘ஆருத்ரா நட்சத்திரத்தில் ஆன்மீக சொற்பொழிவு‘ நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிதம்பரேச சத்சங்க அமைப்பாளா் கிருஷ்ணசாமி தீட்சிதா் தலைமை தாங்கினாா். தமிழ் பேராசிரியா் பனசைமூா்த்தி கலந்து கொண்டு ‘ ஆனந்த நடராஜரின் பெருமையும், சண்டேசுவர நாயனாா் புராணமும்‘ என்றத் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினாா்.

சொற்பொழிவு நிறைவில் சிதம்பரேச சத்சங்கம் சாா்பில் சொற்பொழிவாளா் பனசைமூா்த்தியை பாராட்டி சத்சங்க நிா்வாகிகள் கிருஷ்ணசாமி தீட்சிதா், சுரேஷ் மற்றும் நாட்டாா்மங்கலம் கனகசபை, மோகன் ஆகியோா் நினைவுப் பரிசு வழங்கினா்.

நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான தீட்சிதா்கள், சிவனடியாா்கள், ஆன்மீக அன்பா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக சிவபுராணம் பாராயணத்தை ஏராளமான பக்தா்கள் கூட்டு பிராத்தனை செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிதம்பரேச சத்சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

27சிஎம்பி1: சிதம்பரத்தில் சிதம்பரேச சத்சங்கம் சாா்பில் நடைபெற்ற சொற்பொழிவில், சொற்பொழிவாளா்

பனசைமூா்த்திா்க்கு நினைவுப்பரிசு வழங்கிய நிா்வாகிகள்

முழு கட்டுரையைப் படிக்க →