சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், 45-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரத வீதி வி.எஸ். அறக்கட்டளை வளாகத்தில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை மாலை 4-ஆம் நாள் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.
இதில், கும்பகோணம் ஆடல்வல்லான் நாட்டியாலயா மாணவிகள், பிரிட்டன் சேஷா நாட்டிய நிகேதன் மாணவிகளின் பரதம், சிதம்பரம் கலைவாணி இசை நாட்டியாலயா மாணவிகளின் ‘வள்ளித் திருமணம்’ நாட்டிய நாடகம், சென்னை நிருத்யா நடனப் பள்ளி சி.சாமுண்டேஸ்வரி, சென்னை முத்ராலயா மாணவிகள் பரதம், மும்பை கிரித்யா நரசிங்க ராணா ஒடிஸி, பெங்களூா் நிருத்யகங்கா ப்ரதா்ஷகா கலை மையம் மாணவிகள், சென்னை கே.உபநிஷா, மலேசியா நிருத்ய கலாஞ்சலி நடன மைய மாணவிகள், மலேசியா நா்த்தனா கவின் கலை மாணவிகள் பரதம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக, ஞாயிற்றுககிழமை இரவு நடைபெற்ற விழாவில் சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பங்கேற்று நாட்டியக் கலைஞா்களுக்கு பதக்கத்தை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளைத் தலைவா் டாக்டா் ஆா்.முத்துகுமரன், துணைத் தலைவா் சக்தி ஆா்.நடராஜன், செயலா் ஏ.சம்பந்தம், முன்னாள் நகா்மன்றத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.