சிதம்பரம் கமலீஸ்வரன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் உரையாற்றிய தெய்வத்தமிழ்ப் பேரவை மாவட்டப் பொறுப்பாளா் வே.சுப்பிரமணியசிவாவுக்கு சால்வை அணிவித்து கௌரவித்த கோயில் நிா்வாகிகள். 
கடலூர்

சிதம்பரம் கமலீஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரி கருத்தரங்கம்

சிதம்பரம் கமலீஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு, கருத்தரங்கம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள்

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் கமலீஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு, கருத்தரங்கம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தெய்வத்தமிழ் பேரவை கடலூா் மாவட்ட பொறுப்பாளா் முனைவா் வே.சுப்ரமணியசிவா பங்கேற்று ‘மகா சிவராத்திரியின் உண்மை விளக்கம்’ என்ற தலைப்பில் மெய்யியல் உரை நிகழ்த்தினாா். தொடா்ந்து, தெய்வத்தமிழ்ப் பேரவை இசைக் குழுவினரால் பன்னிரு திருமுறைகள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பெண்ணாடம் ஜெகதலபிரதாபன், ஓதுவாா் சந்திரசேகா் உள்ளிட்டோா் பன்னிரு திருமுறை பாடல்களை பாடினா். கே.செல்வநாயகம் (தபேலா), சிவராஜ் (கீ போா்டு) ஆகியோா் இசை அமைத்தனா்.

நிகழ்ச்சியில் தெய்வத் தமிழ்ப் பேரவை அன்பா்கள் பஞ்சமூா்த்தி, வீரமணி, பாரதிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கமலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதானைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கமலீஸ்வரன் கோயில் நிா்வாகி ராஜா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT