முகப்பு
இந்தியா

ம.பி.யில் இருபிரிவினரிடையே மோதல்: 4 பேர் சுட்டுக் கொலை!

மத்தியப் பிரதேசத்தின், தாதியா மாவட்டத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். 

Updated On : 13 செப்டம்பர், 2023 at 2:03 PM
கோப்புப் படம்
பகிர்:

மத்தியப் பிரதேசத்தின், தாதியா மாவட்டத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். 

தாதியா மாவட்டத்தின் ரெட்டா கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் இருதரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டனர். 

பின்னர் சம்பவ இடத்துக்கு போலீஸார் குழு வந்ததும், துப்பாக்கிச் சூடு முடிவுக்கு வந்தது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

Advertisement

மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவின் சொந்த மாவட்டம் தாதியா என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.