இந்தியா

நீட் பயிற்சி மாணவி தற்கொலை: ராஜஸ்தானில் தொடரும் சோகம்!

ராஜஸ்தான் கோடாவில் மேலும் ஒரு நீட் பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ராஜஸ்தான் கோடாவில் மேலும் ஒரு நீட் பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயிற்சி மையங்களின் நகரமான ராஜஸ்தானின் கோடாவில் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்கதையாகி வருகிறது.

ஜார்க்கண்டின் ராஞ்சியைச் சேர்ந்தவர் ரிச்சா சிங்(16). இவர் கோடாவில் உள்ள ஒரு விடுதியில் தங்கி அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், விடுதி அறையில் ரிச்சா சிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவி தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

இந்தாண்டில் மட்டும் இதுவரை 23 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மருத்துவம், பொறியியல் போன்ற நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்பதற்காக சுமார் 2.25 லட்சம் மாணவர்கள் பல்வேறு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT