பிகாரில் படகு கவிழ்ந்து விபத்து: 16 மாணவர்கள் மாயம்!
பிகார் மாநிலத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 16 மாணவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 16 மாணவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முசாபர்பூர் மாவட்டம் மதுபூர்பட்டி கேட் என்ற பகுதியில் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் பாக்மதி ஆற்றை கடக்க 33 மாணவர்கள் படகில் சென்றுள்ளனர். அப்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உடனடியாக கிராம மக்கள் இணைந்து 17 மாணவர்களை பாதுகாப்பாக மீட்டனர். மேலும், 16 மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்றடைந்தனர். இருப்பினும், மீட்புப் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் இன்னும் வந்து சேராததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!
இந்த விபத்து குறித்து பேசிய நிதீஷ் குமார், மூத்த அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு சென்று தேவையான ஏற்பாடுகளை செய்து தர உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.