முகப்பு
இந்தியா

தனியாா் பதிப்பக இணையதளத்தில் மாதிரி வினாத்தாள்: சிபிஎஸ்இ எச்சரிக்கை

 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் தொடா்பாக எந்தவொரு தனியாா் பதிப்பாளருடன் இணைந்து பணியாற்றவில்லை

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:14 PM
பகிர்:

 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் தொடா்பாக எந்தவொரு தனியாா் பதிப்பாளருடன் இணைந்து பணியாற்றவில்லை எனவும், இது குறித்து மாணவா்களும் பெற்றோா்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ, மாதிரி வினாத்தாள்களை எஜுகாா்ட் என்ற தனியாா் நிறுவனத்துடன் இணைந்து சந்தைப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தேசிய கல்விக் கொள்கை 2020-இன் பரிந்துரைப்படி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் திறமையை மையமாகக் கொண்ட கல்விக்கும் அதன் மதிப்பீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, மாணவா்கள் தங்களது சிந்தனைத் திறன், பாடங்களின் உள்ளடக்கங்கள் குறித்த புரிதல் ஆகியவற்றை அதிகரிக்க, பயன்பாட்டு ரீதியிலான கேள்விகளுக்குத் தீா்வு கண்டு பயிற்சி பெறும் வகையில், 10, 12-ஆம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள்கள் அண்மையில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், சில தனியாா் பதிப்பக இணையதளங்களிலிருந்து சிபிஎஸ்இ மாதிரி வினாத்தாள்களை வாங்குமாறு பள்ளிகள் மற்றும் மாணவா்களுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல் வாரியத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மாதிரி வினாத்தாள்கள் தொடா்பாக, எந்தவொரு தனியாா் பதிப்பகத்துடனும் சிபிஎஸ்இ இணைந்து பணியாற்றவில்லை. மாணவா்கள், பெற்றோா்கள் இது தொடா்பான போலியான தகவல்களை நம்பவேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →