இந்தியா

பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு.. எக்ஸ்பிரஸ்வே சாலையில் பதிவான சிசிடிவி காட்சி

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையைக் கடந்து கீழே விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

DIN


காஸியாபாத்: தில்லி - மீரட் எக்ஸ்பிரஸ்வே சாலையில், தில்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையைக் கடந்து கீழே விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பேருந்தில் பயணம் செய்த 50 பேரில், 20 பயணிகள் எலும்பு முறிவு உள்பட படுகாயம் அடைந்தனர். உள்ளூர் மக்களால் மீட்கப்பட்ட பயணிகள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து, நேற்று மாலை 5 மணிக்கு நிகழ்ந்துள்ளது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 25 வினாடிகள் ஓடும் சிசிடிவி காட்சியில், பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, இடதுபக்கமாக சாலையை குறுக்காகக் கடக்கிறது.  பின்னால் வரும் வாகனங்களை எல்லாம் கடந்து, சாலையின் தடுப்பை உடைத்துக்கொண்டு, சாலைக்கு அப்பால் இருக்கும் பள்ளத்தில் கவிழ்ந்து விழுகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் பயணிகளை மீட்டனர். அதற்குள், அவ்வழியாகச் சென்ற பயணிகளே பலரையும் மீட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT