கோப்புப்படம் 
இந்தியா

நிபா: கோழிக்கோட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு செப். 24 வரை விடுமுறை!

நிபா வைரஸ் பாதிப்பினால் கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வருகிற செப்டம்பர் 24 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

நிபா வைரஸ் பாதிப்பினால் கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வருகிற செப்டம்பர் 24 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒருவரும் செப். 11 ஒருவரும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததையடுத்து சந்தேகத்தின்பேரில் அவர்களது மாதிரிகள் புணே ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டு, பின்னர் அது நிபா தொற்றுதான் என உறுதி செய்யப்பட்டது. 

இறந்த இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். 

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், மாநில அரசு தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த இரு நாள்கள்  கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற செப்டம்பர் 24 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, கல்வி நிறுவனங்கள்  ஆன்லைன் வகுப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT