இந்தியா

ஆப்பிள் ஐஃபோன் 15: முன்பதிவு செய்வது எப்படி? ஆஃபர் விவரங்கள்!

DIN

ஆப்பிள் ஐஃபோன் 15 ஸ்மார்ட்ஃபோன்களின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 15 மாடல் செப். 12 ஆம் தேதி சந்தையில் அறிமுகமானது. 

இந்தியாவிலேயே தயாரிக்கப்ட்டது என்பதால் ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஃபோன் 15 சீரீஸில் ஐஃபோன் 15, ஐஃபோன் 15 பிளஸ், ஐஃபோன் 15 ப்ரோ, ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் உள்ளன. 

இதில் நவீன டிஸ்பிளே, 48 மெகா பிக்சல் கேமரா, மறுசுழற்சி செய்யக்கூடிய நவீன பேட்டரிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. கிராபிக்ஸ், மொபைல் கேமிங் ஆகியவற்றுக்கு சிறந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள் நிறுவனங்களின் சார்ஜிங் போர்ட்டர்களுக்கு பதிலாக, ஐஃபோன் 15 மாடல்களில் டைப்-சி சார்ஜிங் போர்ட்டர் உள்ளது. 

இதற்கான முன்பதிவு நேற்று(செப்.15) மாலை தொடங்கியுள்ளது. 

இந்தியாவில் விலை

ஐஃபோன் 15 (128 ஜிபி): ரூ 79,900
ஐஃபோன் 15 (256 ஜிபி): ரூ 89,900
ஐஃபோன் 15 (512 ஜிபி): ரூ 1,09,900

ஐஃபோன் 15 பிளஸ் (128 ஜிபி): ரூ 89,900
ஐஃபோன் 15 பிளஸ் (256 ஜிபி): ரூ 99,900
ஐஃபோன் 15 பிளஸ் (512 ஜிபி): ரூ 1,19,900

ஐஃபோன் 15 ப்ரோ(128 ஜிபி): ரூ. 1,34,900
ஐஃபோன் 15 ப்ரோ (256 ஜிபி): ரூ.1,44,900
ஐஃபோன் 15 ப்ரோ (512 ஜிபி): ரூ. 1,64,900
ஐஃபோன் 15 ப்ரோ (1 டிபி): ரூ. 1,84,900

ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் (256 ஜிபி): ரூ 1,59,900
ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் (512 ஜிபி): ரூ 1,79,900
ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் (1 டிபி): ரூ. 1,99,900

எப்படி முன்பதிவு செய்வது? 

ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டுமெனில் https://www.apple.com/in என்ற நிறுவனத்தின் அதிகாரபூர்வ தளத்தில் சென்று முன்பதிவு(pre-order) செய்யலாம். 

உங்கள் போன் மாடலை தேர்வு செய்தபின்னர் அதன் நிறத்தையும் எவ்வளவு ஸ்டோரேஜ் வேண்டும் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும். 

நேரடியாக சென்று வாங்க விரும்புவோர் ஆப்பிள் தயாரிப்புகள் விற்கும் கடைகளுக்குச் சென்று முன்பதிவு செய்யலாம். 

டெலிவரி: செப். 22 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்ட ஐஃபோன் 15 ஸ்மார்ட்போன்கள் டெலிவரி செய்யப்படுகிறது.  

ஆஃபர்கள் என்னென்ன? 

ஆப்பிள் ஆன்லைன் தளத்தில் முன்பதிவு செய்யும்போது ஹெச்டிஎப்சி கார்டுகளை பயன்படுத்தினால் ஐஃபோன் 15 ப்ரோ, ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுக்கு ரூ. 6,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

ஐஃபோன் 15, ஐஃபோன் 15 பிளஸ் மாடல்களுக்கு ரூ. 5,000 வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பழைய ஐஃபோன்களைக் கொடுத்தும் புதியதை ஆர்டர் செய்யலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களில் 4 நாள்கள் கனமழை எச்சரிக்கை

நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கான சான்றிதழ் அளிப்பு

ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: பிரசாரக் கூட்டத்தில் சோனியா உருக்கம்

பிரதமா் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பாா்: தொழில் நிறுவனங்களிடம் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை

திருப்பத்தூா் எழுத, படிக்க தெரியாதவா்கள் கணக்கெடுக்கும் பணி: கல்வி இணை இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT