இந்தியா

டெங்கு பாதிப்பை கையாளுவதில் சிக்கல்: வங்க தேசத்தில் 778 பேர் பலி!

வங்க தேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அங்கு பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

DIN

வங்க தேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அங்கு பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

கடந்த சில மாதங்களாக வங்க தேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், 

டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்றவை கொசுக்களால் பரவும் வைரஸ்கள். காலநிலை மாற்றத்தால் வேகமாகப் பரவுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் எச்சரித்துள்ளது. 

இந்த நிலையில், வங்க தேசத்தில் இந்தாண்டு டெங்கு பாதித்து 778 பேர் இறந்துள்ளனர். 1,57,172 பேர் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

காய்ச்சல் தரவுகள் சரிவர பதிவாகாததால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என ஐ.நா.குழந்தைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னதாக கடந்த 2022-ல் டெங்கு காய்ச்சல் பாதித்து 281 பேர் உயிரிழந்தனர். 

டெங்கு பொதுவாக அதிக காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, உடல் வலி போன்ற அறிகுறிகள் காணப்படுகிறது. ஒருசில நேரங்களில் உள்புற ரத்தப்போக்கு அதிகரிப்பதால் மரணத்திற்கு வழிவகுக்கிறது. 

நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள முக்தா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்ற வருகின்றனர். 

டெங்கு ஒழிப்பில் நிலையான கொள்கை இல்லாததால் வங்கதேசம் டெங்கு வெடிப்பைச் சமாளிக்கப் போராடி வருவதாகவும், எவ்வாறு சிகிச்சையளிப்பது என்று பலருக்கு தெரியவில்லை. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு டெங்கு பாதிப்பைக் கையாளுவதில் சிறந்த பயிற்சி தேவை என்று முக்தா மருத்துவமனை இயக்குனர் முகமது நியாதுஸ்மான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணத்திற்கு முன்பும், பின்பும் ஜாதகரின் குணம் மாறுவது ஏன்?

நெருங்குகிறது தீவிர புயல்! ஆந்திரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் மோந்தா!

மோந்தா புயல்: 100 ரயில்கள், ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து!

என் வாழ்நாள் முழுவதும் போற்றும் படம் பைசன்: அனுபமா உருக்கம்!

மணிக்கு 110 கி.மீ. சூறைக்காற்று வீசும்! ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா, சத்தீஸ்கரில் சிவப்பு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT