இந்தியா

தில்லியில் பரவலாக பெய்த மழையால் வெப்பத்திலிருந்து நிவாரணம்!

தேசிய தலைநகரில் இன்று காலை சில இடங்களில் மழை பெய்ததால் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்த குடியிருப்பாளர்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

DIN

புதுதில்லி:  தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்த குடியிருப்பாளர்களுக்கு இன்று காலையில் பெய்த மழையால் நகரத்தில் புழுக்கம் குறைந்து இனிமையான வானிலை நிலவியது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றைய குறைந்தபட்ச வெப்பநிலை 26.9 டிகிரி செல்சியஸாக இருந்ததாக தெரிவித்துள்ளது. இது பருவத்தின் சராசரியை விட இரண்டு புள்ளிகள் அதிகமாகும்.

காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 0.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. காலை 8.30 மணி நிலவரப்படி காற்றின் ஈரப்பதம் 85 சதவீதமாக இருந்தது.

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் பகலில் லேசான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக இருக்கும். காலை 11 மணியளவில் தில்லியின் காற்றின் தரக் குறியீடு 84ஆக (ஆதாவது திருப்திகரமானதாக) இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT