இந்தியா

பாரமுல்லாவில் மூன்றாவது பயங்கரவாதி சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லை வழியாக ஊடுருவும் முயற்சியைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்ததில் மூன்றாவது பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

DIN

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லை வழியாக ஊடுருவும் முயற்சியைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்ததில் மூன்றாவது பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவப் படைத் தலைவா் கா்னல் மன்ப்ரீத் சிங், ராணுவ மேஜா் ஆசிஷ், காவல் துறை துணை கண்காணிப்பாளா் ஹுமாயூன் பட் ஆகிய 3 அதிகாரிகள் புதன்கிழமை உயிரிழந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. தேடுதலின் முடிவில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மூன்றாவது பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 

தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 50 கோடிக்கு விற்பனையான டிமான்டி காலனி - 3 உரிமங்கள்!

45 சவரன் நகையைக் கண்டெடுத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை!

பிக் பாஸ் 9: வெளியேறும்போதுகூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

SCROLL FOR NEXT