இந்தியா

நான் ரயில்வே நடைமேடையில் வளர்ந்தவன்: பிரதமர் மோடி

DIN

ஏழை குடும்பத்தில் பிறந்து ரயில்வே நடைமேடையில் வளர்ந்த எனக்கு மக்கள் இவ்வளவு அன்பை அளித்துள்ளார்கள் என்று மக்களைவையில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக பேசினார்.

நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. பழைய கட்டடத்தின் கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதிய கட்டடத்தில் கூட்டம் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது, “ஏழை குடும்பத்தில் பிறந்து ரயில்வே நடைமேடையில் வளர்ந்த ஒரு குழந்தை நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் மக்களிடம் இவ்வளவு அன்பை பெறுவேன் என்பதை நினைத்துகூட பார்க்கவில்லை.

நாடாளுமன்றத்துக்கு முதல்முறையாக எம்பியாக தேர்வாகி நுழைந்தபோது நான் கீழே விழுந்து ஜனநாயகத்தின் கோவிலை வணங்கினேன்.” என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT