சித்தராமையா (கோப்புப் படம்) 
இந்தியா

காவிரி விவகாரம்: நாளை தில்லி செல்கிறார் சித்தராமையா!

கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பதை பிரதமர் மோடியிடம் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு வலியுறுத்தவுள்ளது. 

DIN

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் நாளை (செப். 19) தில்லி செல்லத்திட்டமிட்டுள்ளார். 

தில்லி செல்லும் சித்தராமையா கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடனும் நேரில் ஆலோசிக்கவுள்ளார். ஆலோசனைக்குப் பிறகு காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தையும் சந்திக்கவுள்ளனர். 

கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பதை பிரதமர் மோடியிடம் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு வலியுறுத்தவுள்ளது. 

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழு தில்லி சென்று மத்திய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்த நிலையில், தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா தில்லி செல்லவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT