ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் வன்முறையை தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஃபிரோஸ்பூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிர்கா மம்மன் கான் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நூ மாவட்டத்தில் கடந்த ஜூலையில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலத்தின் மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால், அங்கு இரு சமூகத்தினரிடையே பெரிய அளவில் கலவரம் மூண்டது. பின்னா், குருகிராம் பகுதிக்கும் கலவரம் பரவிய நிலையில், 2 ஊா்க்காவல் படை வீரா்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த நிலையில், நூ வன்முறை தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ மம்மன் கான் கடந்த 15-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து எம்எல்ஏ நான்கு நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட எம்எல்ஏ மீது போலீஸார் நான்கு எஃப்ஐஆர்கள் பதிவு செய்தனர்.
இதையடுத்து இன்று கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையொட்டி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு மேலும் 14 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.