இந்தியா

புதிய நாடாளுமன்றத்தில் முதல் கூட்டம் தொடங்கியது!

DIN

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்குப் பிரியாவிடை அளிக்கும் வகையில், கடந்த 75 ஆண்டுகளில் நாடாளுமன்றம் கடந்து வந்த பாதைகள் குறித்த விவாதம் நடைபெற்றது.

இதனையடுத்து, பழைய கட்டடத்தின் வளாகத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் இணைந்து குழுப் புகைப்படத்தை இன்று காலை எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து, பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் நாடாளுமன்ற அனுபவங்கள் குறித்து மூத்த உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர்.

பின், பகல் 12.45 மணியளவில் பழைய நாடாளுமன்ற வளாகத்திலிருந்து புதிய கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் பேரணியாக சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, பகல் 1.15 மணியளவில் மக்களவையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் முதல் கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி, ராகுல் காந்தி மற்றும் அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT