கோப்புப் படம். 
இந்தியா

திருப்பதியில் 6-வது சிறுத்தை சிக்கியது!

ஆந்திர மாநிலத்தில் திருமலை நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 6-வது சிறுத்தை சிக்கியுள்ளது. 

DIN

ஆந்திர மாநிலத்தில் திருமலை நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 6-வது சிறுத்தை சிக்கியுள்ளது. 

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக நெல்லூரைச் சேர்ந்த குடும்பத்தினருடன் சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். 

இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்தனர். 

இந்த நிலையில் திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 5வது சிறுத்தை சிக்கிய நிலையில், (செப்.20) இன்று ஆறாவது சிறுத்தை பிடிப்பட்டுள்ளது.

நரசிம்ம சுவாமி கோயில் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது. பிடிப்பட்ட சிறுத்தை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்

திருப்பராய்த்துறை கோயிலில் நாளை குடமுழுக்கு

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT