இந்தியா

காவிரி: மத்திய அமைச்சருடன் கர்நாடக துணை முதல்வர் சந்திப்பு!

DIN

காவிரி விவகாரம் தொடா்பாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை நேரில் சந்தித்து கர்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் செவ்வாய்க்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்துக்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 5,000 கன அடி காவிரி நீரை திறந்துவிடும்படி கா்நாடகத்துக்கு காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதற்கிடையே, காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தின் பரிந்துரையின்படி, கா்நாடகம் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீா் வழங்காத நிலையில் தமிழகத்தை சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் 13 எம்பிக்கள் குழு நேற்று மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து முறையிட்டது.

இதையடுத்து கர்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு தில்லிக்கு புறப்பட்டு சென்றனா். அங்கு புதன்கிழமை கா்நாடகத்தைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்களுடன் சிற்றுண்டி கலந்துரையாடலில் ஈடுபடவிருக்கிறாா்கள். அக்கூட்டத்தில் காவிரி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

முன்னதாக, தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை நேரில் சந்தித்து டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது கர்நாடக அமைச்சர் டி.பி. ஜெயசந்திரா, எம்பிக்கள் டி.கே. சுரேஷ் மற்றும் ஜி.சி. சந்திரசேகர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறம் மாறும் உலகில்

ரஜத் படிதார் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 188 ரன்கள் இலக்கு!

அல்ஜீப்ரா காதலி! ஐஸ்வர்யா தத்தா..

தீராத உறவுகளின் அற்புதம் இது!

சுற்றுச்சூழல் மேம்பாட்டில் முன்மாதிரி ஊராட்சி

SCROLL FOR NEXT