இந்தியா

மேற்குவங்கத்தில் டெங்குவுக்கு பள்ளிச் சிறுமி பலி!

மேற்குவங்கத்தில்  டெங்குவால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

DIN

மேற்குவங்கத்தில்  டெங்குவால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் பெயர் டோனா தாஸ் என்பது தெரிய வந்துள்ளது. அவர் கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பகுதியைச் சேர்ந்தவர். 7 ஆம் வகுப்பு படித்து வரும்  அவர் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 24) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு காய்ச்சல் இருந்ததால் வீட்டிலிருந்துள்ளார். அவர் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரது உயிரை காப்பாற்றியிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவத் துறையில் மூத்த அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டபோது, டெங்கு காய்ச்சல் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செய்யாறு தொகுதியில் கேள்விக்குறியாக 34,219 வாக்காளா்கள்

இலங்கை வெள்ளத்தில் 607 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை!

இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு: வருத்தம் தெரிவித்த சிஇஓ

மொபைல் போன் இறக்குமதி 0.02% ஆக சரிவு!

சேலையில் செதுக்கி... ஷ்ரத்தா ஸ்ரீீநாத்!

SCROLL FOR NEXT