இந்தியா

கடன் கொடுக்கத் தவறிய தலித் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

பிகார் பாட்னாவில் கடன் கொடுக்கத் தவறிய தலித் பெண்ணைத் தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த அவலம் அரங்கேறியுள்ளது. 

DIN

பிகாரின், பாட்னாவில் கடன் கொடுக்கத் தவறிய தலித் பெண்ணைத் தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த அவலம் அரங்கேறியுள்ளது. 

பாட்னாவில் ஒரு கிராமத்தில் ரூ.9000 ஆயிரம் கடனுக்கு ரூ.1,500 வட்டி கட்டத் தவறியதால் தலித் பெண் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், 

தலித் பெண் ஒருவர் தலையில் தாக்கப்பட்டு காயங்களுடன் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். 

அவர் அளித்த புகாரில், தனது கணவர் சில மாதங்களுக்கு முன்பு பிரமோத் சிங் என்பவரிடம் ரூ.9,000 கடன் வாங்கியதாகவும், சில மாதங்களாக அதிக வட்டி கேட்டு எங்களை மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார். இதை நாங்கள் நிராகரித்து வந்தோம். 

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை(செப்.23) அன்று தண்ணீர் எடுக்க வெளியே சென்றபோது ஆறு பேர் கொண்ட கும்பம் என்னைத் தாக்கி நிர்வாணமாக்கி, சிறுநீரை எடுத்து வாயில் ஊற்றி கொடுமைப்படுத்தினார்கள். தலையில் கட்டையால் தாக்கினார்கள். 

நான் ஒருவழியாக அவர்களிடமிருந்து தப்பித்துக் காவல் நிலையத்தை அடைந்தேன் என்று பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் தலைமறைவாகி உள்ளனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 குழுக்களை அமைத்துத் தேடி வருவதாக அவர் தெரிவித்தார். 

இந்த சம்பவத்துக்கு மாநில முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காவல்துறைக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்பாராமல் வரும் பணம்! மோசடியாளர்கள் வலையில் சிக்க வேண்டாம்! | Cyber Security | Cyber Shield

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

இலங்கையில் நாயகி ஊர்வலம்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

SCROLL FOR NEXT