இந்தியாவில் தனது ஐ-போன்களின் உற்பத்தியை 5 மடங்குக்கும் மேல் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனம் இந்திய உற்பத்தி 700 கோடி டாலரை (சுமாா் ரூ.58,213 கோடி) தாண்டியது.
இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் (2023-24) இந்தியாவில் தனது உற்பத்தியை 4,000 கோடி டாலராக (சுமாா் ரூ.3.33 லட்சம் கோடி) அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டைவிட 5 மடங்குக்கும் மேல் அதிகமாகும் என்று அரசு வட்டாரங்கள் கூறின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.