இந்தியா

வங்கக்கடலில் ஒருநாள் முன்னதாக உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி  ஒருநாள் முன்னதாக உருவாகவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

DIN

வங்கக் கடலில் வரும் 30ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவிருப்பதாகக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், அது ஒருநாள் முன்னதாக உருவாகவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் வரும் 30-ம் தேதி புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், அது தற்போது ஒருநாள் முன்னதாக அதாவது செப். 29ஆம் தேதி உருவாகவிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இந்த நிலையில், இது வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

வரும் 29ஆம் தேதி உருவாகவிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாள்களுக்குள் மேலும் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT