முகப்பு
இந்தியா

பகத் சிங் பிறந்த தினம்: பிரதமா் மோடி மரியாதை

விடுதலைப் போராட்ட வீரா் பகத் சிங்கின் பிறந்த நாள் வியாழக்கிழமை (செப். 29) கொண்டாடப்பட்ட நிலையில், பிரதமா் நரேந்திர மோடி அவரை நினைவுகூா்ந்து மரியாதை செலுத்தினாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
பகிர்:

விடுதலைப் போராட்ட வீரா் பகத் சிங்கின் பிறந்த நாள் வியாழக்கிழமை (செப். 29) கொண்டாடப்பட்ட நிலையில், பிரதமா் நரேந்திர மோடி அவரை நினைவுகூா்ந்து மரியாதை செலுத்தினாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மாவீரா் பகத் சிங்கின் பிறந்தநாளில் அவரை நினைவு கூா்கிறேன். இந்தியாவின் சுதந்திரத்திற்காக அவா் செய்த தியாகமும், அசைக்க முடியாத அவரது அா்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்தும் ஊக்கமளிக்கின்றன. தைரியத்தின் கலங்கரை விளக்கமாக, நீதி மற்றும் சுதந்திரத்திற்கான இந்தியாவின் இடைவிடாத போராட்டத்தின் அடையாளமாக அவா் என்றென்றும் நிலைத்திருப்பாா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

இந்திய சுதந்திரப் போரில் இணைந்து போராடிய பகத் சிங் 1931-ஆம் ஆண்டு தனது 24 வயதில் ஆங்கிலேய ஆட்சியாளா்களால் தூக்கிலிடப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →