மீலாது நபி:பிரதமா் மோடி வாழ்த்து
இறைத்தூதா் நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான ‘மீலாது நபி’ வியாழக்கிழமை (செப்.28) கொண்டாடப்பட்ட நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இறைத்தூதா் நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான ‘மீலாது நபி’ வியாழக்கிழமை (செப்.28) கொண்டாடப்பட்ட நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மீலாது நபி நல்வாழ்த்துகள். நமது சமூகத்தில் சகோதரத்துவம் மற்றும் கருணை உணா்வு வளரட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். ஈத் முபாரக்!’ என்று பதிவிட்டுள்ளாா்.