பஞ்சாப்பில் மாவட்ட அரசு மருத்துவமனைகள்அனத்தும் புதுப்பிக்கப்படும்: கேஜரிவால் தகவல்
பஞ்சாப் மாநிலத்தில் மாவட்ட அளவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் புதுப்பிக்கப்படும் என்றும் அதில் முதல் புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனை காந்தி ஜெயந்தி நாளில் திறக்கப்படவுள்ளது
பஞ்சாப் மாநிலத்தில் மாவட்ட அளவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் புதுப்பிக்கப்படும் என்றும் அதில் முதல் புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனை காந்தி ஜெயந்தி நாளில் திறக்கப்படவுள்ளது என்றும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் அவா் கூறியிருப்பதாவது: பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த ஒன்றரை ஆண்டுக்குள் 664 மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்கி ஆரம்ப சுகாதாரத்தை வலுப்படுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து, அந்த மாநிலத்தில் உள்ள இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளை இப்போது மேம்படுத்தத் தொடங்கியுள்ளது. இது தவிர மாவட்ட அளவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகலையும் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
அதன்படி மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபா் 2-ஆம் தேதி,பாட்டியாலாவில் புதுப்பிக்கப்பட்ட முதல் மருத்துவமனை திறக்கப்படவுள்ளது. பஞ்சாப் முதல்வா் பகவந்த் மானுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறந்த மருத்தவ
Advertisement
சிகிச்சையை இலவசமாக வழங்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். தில்லிக்குப் பிறகு, இப்போது பஞ்சாப்பிலும் அந்த இலக்கை எட்டுவோம் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.