புதுதில்லி: தில்லியின் மிகப்பெரிய மொத்த பழங்கள் மற்றும் காய்கறி சந்தைகளில் ஒன்றான ஆசாத்பூர் மண்டியில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
மாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அடர்த்தியான புகை மூட்டம் காற்றில் பரவியது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீயில் எண்ணற்ற ஸ்டால்களும், சேமிப்பு பகுதிகளும் என அனைத்து தீக்கிரையான நிலையில் சற்று தொலைவில் புகை வெளியேறுவதைக் காண முடிந்தது.
தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தீ விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.