இந்தியா

ரூ. 2,000 நோட்டுகளை மாற்ற நாளை(செப்.30) கடைசி நாள்!

DIN

மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதன்படி, ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நாளையுடன்(செப். 30) நிறைவடைகிறது.

கடந்த  2016 ஆம் ஆண்டு ரூ. 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தபோது 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் 2 ஆவது பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக 2,000 ரூபாய்  நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக கடந்த மே மாதம் 19 ஆம் தேதி ஆர்பிஐ அறிவித்தது. 

2,000 ரூபாய்  நோட்டுகளை எந்தவித படிவம் மற்றும் அடையாள அட்டையின்றி வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவித்தது. 

அதன்படி, ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான அல்லது மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த காலக்கெடுவை நீட்டிக்கும் எண்ணமில்லை என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது. எனவே, ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நாளையுடன்(செப். 30) நிறைவடைகிறது.

அதனால் 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் இன்றும் நாளையும் வங்கிகளில் சென்று மாற்றிக்கொள்ளுங்கள். 

செப்டம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூ.3.32 லட்சம் கோடி மதிப்பிலான 93 சதவிகித 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ஆர்பிஐ அறிவித்திருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT