முகப்பு
இந்தியா

முதல்வரின் வாகனம் செல்வதற்காக ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்!

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் வாகனம் செல்வதற்காக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் இருந்த ஆம்புலன்ஸ் வாகனம் சுமார் ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

Updated On : 30 செப்டம்பர், 2023 at 4:47 PM
பகிர்:

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் வாகனம் செல்வதற்காக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் இருந்த ஆம்புலன்ஸ் வாகனம் சுமார் ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

பிகார் தலைநகர் பாட்னா அருகே உள்ள பத்துவா பகுதியில் முதல்வர் நிதீஷ் குமாரின் வாகனம் சென்றுள்ளது. இதற்காக அப்பகுதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த போக்குவரத்து நிறுத்தத்தில் ஒரு ஆம்புலன்ஸும் சிக்கியுள்ளது. ஆம்புலன்ஸில் ஒரு குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்துள்ளது. குழந்தையின் தாய் கதறி அழுதுள்ளார். சிகிச்சைக்காக பாட்னாவுக்கு செல்லும் வழியில்தான் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

இந்த சம்பவம் பிகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிண்டனர். 

நாளந்தாவில் எத்தனால் தொழிற்சாலையை திறந்துவைக்க முதல்வர் சென்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.