முகப்பு
இந்தியா

கட்டுமான பணியின் போது நேர்ந்த சோகம்

இன்னும் முடிக்கப்படாத கட்டடத்தில் நடைபெற்ற வந்த பணியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Updated On : 26 டிசம்பர், 2023 at 2:02 PM
பகிர்:

புது தில்லி: தில்லி நரேலா பகுதியில் இன்னும் கட்டிமுடிக்கப்படாத கட்டடத்தின் லிஃப்டில் ஏற்பட்ட கோளாறினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

திங்கள்கிழமை இரவு விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தின் காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அடிபட்ட கட்டிடத் தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிழந்தவரின் சடலம் உடற்கூராய்வுக்கு அனுப்பபட்டுள்ளதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.