முகப்பு
இந்தியா

கூலிப்படையை ஏவி தந்தையைக் கொன்ற மகன்: பெங்களூருவில் பரபரப்பு!

பெங்களூருவின் மாரத்தஹள்ளியில் ரூ.1 கோடிக்கு கூலிப்படை ஏவி தன் தந்தையைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:37 AM
பகிர்:

பெங்களூருவின் மாரத்தஹள்ளியில் ரூ.1 கோடிக்கு கூலிப்படை ஏவி தன் தந்தையைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரு பனத்தூர் வீரப்பாலே பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மனைவி, மகன் மணிகண்டா(30) ஆகியோருடன் வசித்துவந்தார் நாராயணசாமி(71). 

கடந்த பிப்.13-ஆம் தேதி தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில், மர்ம நபர்களால்  வெட்டிக் கொல்லப்பட்டார். 

இந்நிலையில் மகன் மணிகண்டா மற்றும் அவரது நண்பர்கள் ஆதர்ஷா, சிவக்குமார் ஆகியோரை சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டு போலீஸார் அவர்களை கைது செய்தனர். 

மகன் மணிகண்டனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், 

மணிகண்டனுக்கு திருமணமான நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக தனது முதல் மனைவியை கொன்றுள்ளார். அவருக்கு மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். அவருடனும் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். 

இந்நிலையில், பெங்களூரில் 28 அடுக்குமாடி குடியிருப்புகள், பல ஏக்கர் நிலத்துக்கும் சொந்தக்காரரான நாராயணசாமி, அதில் ஒன்றையும், சில ஏக்கர் நிலத்தையும் மகனின் இரண்டாவது மனைவிக்கு எழுத முடிவு செய்தார். 

இதனால் மனமுடைந்த மணிகண்டன், தந்தையை கொல்ல முடிவு செய்தார். கூலிப்படை நியமித்து அவர்களுக்கு ரூ.1 கோடி கொடுப்பதாகப் பேரம் பேசியதையடுத்து, 
முன்பணமாக ரூ.1 லட்சம் கொடுத்ததாக தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து, வழக்குப் பதிந்து மாரத்தஹள்ளி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →