முகப்பு
இந்தியா

ரயில் வருகையை அறிவிக்காத ஊழியர்கள்.. பயணிகள் பரிதவிப்பு

ரயிலின் வருகையில் ஏற்பட்ட மாற்றத்தை ரயில் நிலைய ஊழியர்கள் அறிவிக்காததால், ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Updated On : 26 ஜூன், 2023 at 12:06 PM
பகிர்:


கலபுரகி: ரயிலின் வருகையில் ஏற்பட்ட மாற்றத்தை ரயில் நிலைய ஊழியர்கள் அறிவிக்காததால், ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

கலபுரகி ரயில் நிலையத்தில், செகுந்தராபாத் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள், வழக்கமாக அந்த ரயில் வரும் நடைமேடை ஒன்றில் காத்திருந்தனர்.

ரயில் வரும் நேரம் ஆன பிறகும், ரயில் வராத நிலையில், அந்த ரயில் மற்றொரு நடைமேடை வழியாக சென்றுவிட்டதாக தகவல் கிடைத்ததால், முன்பதிவு செய்தும் ரயிலில் ஏற முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகினர்.

Advertisement

இதில், ரயில் குறித்து அறிவிக்க மறந்தது எங்கள் தவறுதான் என்று ரயில்வே அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

இது குறித்து பயணிகள் கூறுகையில், காலை 5.45 மணிக்கு முதல் நடைமேடையில் விரைவு ரயில் வர வேண்டும். ரயில்களின் முன்னறிவிப்புப் பலகையில், நடைமேடை குறித்த அறிவிப்பு இல்லாமல் ரயிலின் பெயர் மட்டும் இருந்தது. பிறகு, ரயில் வரும் நேரம் 6.30க்கு மாற்றப்பட்டது. அப்போதும் நடைமேடை குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. பிறகு, 6.45 மணிக்கு, அறிவிப்புப் பலகையிலிருந்து ரயிலின் பெயர் அகற்றப்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் கேட்டபோது, அந்த ரயில் இரண்டாம் நடைமேடை வழியாக சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அப்போதுதான் ரயில்வே ஊழியர்களுக்கு, நடைமேடை மாற்றம் குறித்து அறிவிக்காமல் விட்டுவிட்டது தெரிய வந்தது. உடனடியாக மாற்று ரயிலில் அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.