சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல் காரணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவர், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டிஎஸ் ராணா தெரிவித்தார்.
அண்மையில் சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 85-ஆவது மாநாட்டில் சோனியா காந்தி பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர், பாரத ஒற்றுமை யாத்திரையுடன், தனது பணி நிறைவடைவதாக தெரிவித்தாா். முன்னதாக ஜனவரி 11 ஆம் தேதி, அவர் ஒரு வைரஸ் சுவாச தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.