இந்தியா

நாட்டுக்காக நாங்கள் பெற்ற பதக்கங்கள் இனி தேவையில்லை: பஜ்ரங் புனியா

DIN

தங்களுக்கு நேர்ந்த துன்புறுத்தல்களுக்கு எதிராக பேசினால் சிறையில் அடைக்கிறார்கள் என ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் சாா்பில் அளிக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு புகாா் மீது கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 

கடந்த 28ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது, நாடாளுமன்ற திறப்பு விழாவுக்காக குவிக்கப்பட்டிருந்த காவலர்கள், வீரர், வீராங்கனைகளை குண்டுக்கட்டாக கைது செய்து அழைத்துச்சென்றனர். 

இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் பங்கேற்று நாட்டுக்காக நாங்கள் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசவுள்ளதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்தனர். 

அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநில ஹரித்வாரிலுள்ள கங்கை ஆற்றங்கரைக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பலர் அப்பகுதியில் குவிந்துள்ளனர். அதிக அளவிலான மக்கள் குவிந்ததால், காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து பேசிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, எங்களுக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களுக்கு எதிராக பேசினால் சிறையில் அடைக்கிறார்கள்.  கங்கை நதி புனிதமானது, நாங்கள் பெற்ற பதக்கங்களை அந்த புனிதத்திலேயே கொடுக்க இருக்கிறோம். நாட்டுக்காக நாங்கள் பெற்ற பதக்கங்கள் இனி தேவையில்லை என வருத்தத்துடன் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்கண்ட்டில் அணிதிரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!

அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை?

பாரதிராஜா, நட்டி இணைந்து நடிக்கும் நிறம் மாறும் உலகில்

’இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக கேஜரிவாலின் மனைவி தேர்தல் பிரசாரம்

சூர்யாவுக்கு மீண்டும் ஜோடியாகும் ஜோதிகா

SCROLL FOR NEXT