முகப்பு
இந்தியா

குஜராத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 40 பேர் காயம்

லக்தார் தாலுகா வானா கிராமம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:09 AM
கோப்புப்படம்
பகிர்:

சுரேந்திரநகர் (குஜராத்): லக்தார் தாலுகா வானா கிராமம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குஜராத் தியோதர் நகரில் இருந்து  ஜூனாகத் நோக்கி நள்ளிரவு 12.15 மணியளவில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 55 முதல் 60 பயணிகள் இருந்துள்ளனர்.  பேருந்து கவிழ்ந்தது.

இந்தநிலையில், பேருந்து வானா கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையோர பள்ளித்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் இருந்த  பயணிகளில், சுமார் 40 பேர் காயமடைந்தனர். இரண்டு பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். 

தகவல் அறிந்து விரைந்து வந்த அந்த பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →