சர்ச்சைக்குள்ளான போஜ்ஷாலா கோயில்/ கமால் மெளலா மசூதி 
இந்தியா

போஜசாலை மசூதி தொல்லியல் ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற அனுமதியின்றி போஜசாலை மசூதி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு.

DIN

போஜசாலை மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள போஜசாலை மற்றும் கமால் மௌலா மசூதிகளில் தொல்லியல் ஆய்வுக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, இஸ்லாமிய தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தொல்லியல் துறையின் ஆய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேலும், தொல்லியல் துறை ஆய்வு அறிக்கை சமர்பித்த பிறகு உச்சநீதிமன்ற அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல், தொல்லியல் ஆய்வு நடைபெறும் இடங்களில் அதன் தன்மையை மாற்றும் வகையில் எந்த ஆய்வும் மேற்கொள்ளக் கூடாது என்று தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் அமைந்துள்ள பழங்கால போஜசாலை வளாகத்தினுள் சரஸ்வதி கோயிலும், அதன் அருகே கமல் மௌலா மசூதியும் அமைந்துள்ளன. கி.பி. 1034-ஆம் ஆண்டு போஜ் மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டதாகவும், பிற்காலத்தில் இப்பகுதியை முற்றுகையிட்ட முகலாயர்கள் அங்கு மசூதி கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, 2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, ஒவ்வொரு செவ்வாயன்றும் சூரியோதயம் தொடங்கி அஸ்தமனம் வரை போஜசாலை வளாக கோயிலில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். போஜசாலை வளாக மசூதியில் ஒவ்வொரு வெள்ளியன்றும் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஞானவாபி மசூதி தீர்ப்பை தொடர்ந்து வழிபடும் உரிமைக்காக இரு தரப்பினர் இடையே சர்ச்சை வெடித்ததால், அப்பகுதியில் அறிவியல்பூர்வ தொல்லியல் ஆய்வு நடத்த ஹிந்துக்கள் தரப்பில் ஆஷிஷ் கோயல் என்பவர் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொல்லியல் துறையினர் 6 வாரங்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

SCROLL FOR NEXT