இந்தியா

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்

DIN

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அந்த கும்பலின் தலைவராக செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு திரைப்பட இயக்குநர் அமீருக்கு தில்லி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்சிபி) அழைப்பாணை அனுப்பியிருந்தது.

முன்னதாக, கடந்த மாதம் 9-ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகை சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.தமிழக திரைத்துறையைச் சேர்ந்த முக்கியப் நபர்களுக்கும் அதில் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர், அமீர் விசாரணைக்கு ஆஜராக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்சிபி) அழைப்பாணை அனுப்பியது. அமீர் இயக்கி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தை ஜாபர் சாதிக் தயாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு ஆஜராக தயார் என அமீர் தெரிவித்திருந்த நிலையில், புதுதில்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று(ஏப். 2) ஆஜரானார். அவரிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்கிறார் ராகுல் காந்தி!

”ரயில் விபத்துகளுக்கு அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்”: ராகுல் | செய்திகள் சிலவரிகளில்| 17.6.2024

"சாதி மறுப்புத் திருமணங்களுக்கு என்றும் ஆதரவு!”: கே. பாலகிருஷ்ணன் பேட்டி

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம்

பாஜக வேட்பாளர் தோல்வி: தொண்டர்கள் 4 பேர் தற்கொலை!

SCROLL FOR NEXT