இந்தியா

முழு சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாமா?

முழு சூரிய கிரகணம் என்றால் என்ன? அதனை பாதுகாப்புடன் பார்ப்பதற்கான வழிமுறை என்ன?

இணையதளச் செய்திப் பிரிவு

முழு சூரிய கிரகணம் என்றால் என்ன? அதனை பாதுகாப்புடன் பார்ப்பதற்கான வழிமுறை என்ன? வெறும் கண்ணால் சூரிய கிரகணத்தை பார்க்கக்கூடாது என்பது ஏன்?

உலகம் முழுவதும் ஏப்ரல் 8-ஆம் தேதி முழு சூரிய கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, மெக்சிகோ, கனடா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் முழு கிரகணம் தென்படும். இதனை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் நிலவு தோன்றி, நிலவின் நிழல் பூமியின் மீது விழுவதே சூரிய கிரகணம் எனப்படுகிறது. இதில் சூரியனை பகுதியளவோ அல்லது முழுமையாகவோ நிலவு மறைத்திருக்கும்.

முழுமையாக மறைத்து நீண்ட இடைவெளிக்கு வெளிச்சமின்றி இருள் சூழ்ந்திருந்தால் அது முழு சூரிய கிரகணம்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு செல்லும்போது சூரியனை பகுதியளவு மறைத்திருந்தால் அது பகுதி சூரிய கிரகணம். இதில் நிலவு மறைத்ததுபோக மிச்ச சூரியன் வில் போன்று காட்சியளிக்கும்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாமா?

சூரியனை சாதாரண நாள்களிலேயே வெறும் கண்ணால் பார்ப்பது சிரமம். எனில் சூரிய கிரகணத்தின்போது பார்க்கலாமா என்றால், அதுவும் கூடாது. வெறும் கண்ணால் பார்ப்பதால் பார்வையிழப்பு கூட ஏற்பட வாய்ப்புண்டு. பகுதி சூரியகிரகணத்தின்போது கூட சூரியனிலிருந்து புறஊதாக் கதிர்கள் வெளியேறும்.

சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் கண் திசுக்களை பாதிப்படையச் செய்து சோலார் ரெட்டினோபதி எனப்படும் கண்பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இது நிரந்தர பார்வையிழப்புக்கும் வழிவகுக்கும்.

நாம் வசிக்கும் பகுதியில் முழு சூரிய கிரகணம் ஏற்படுமாயின் அதனை சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் பார்க்கலாம். கிரகணங்களின்போது பயன்படுத்தும் சிறப்புக் கண்ணாடியை அணிந்து சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். இது சூரியக் கதிர்களின் வீரியத்தைக் குறைக்கும். ஆனால் சில நிமிடங்களுக்கு மட்டுமே பார்க்க வேண்டும்.

வெறும் கண்ணால் சூரிய கிரகணத்தை பார்க்கவே முடியாதா என்று வருந்துவோருக்கு ஒரு வழி உண்டு. உலகம் முழுவதுமுள்ள மக்கள் பார்க்கும் வகையில், சூரிய கிரகணத்தை நாசா நேரடியாக ஒளிபரப்புகிறது. மேலும் மெய்நிகரி வாயிலாகவும் பார்க்க வழிசெய்கிறது.

இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றி கண்டு ரசிப்போம் இந்த அரிய வான நிகழ்வை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் பிரசாரம்: திருச்சியில் தவெக தலைவர் விஜய்! குவிந்த தொண்டர்கள்!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

யுபிஐ பணப்பரிவர்த்தனை செயல்படுவது எப்படி?

திண்டுக்கல் அருகே பஞ்சு ஆலையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்

ஆளத்தொடங்குகிறதா செய்யறிவு? அல்பேனியாவில் முதல் ஏஐ அமைச்சர் டெய்லா யார்?

SCROLL FOR NEXT