இந்தியா

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் ஜெ.பி. நட்டா

DIN

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா, மாநிலங்களவை உறுப்பினராக தில்லியில் சனிக்கிழமை பதவியேற்றார்.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நட்டாவைத் தவிர, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களும் சனிக்கிழமை பதவியேற்றனர்.

மகாராஷ்டிரத்தில் இருந்து அசோக்ராவ் சங்கர்ராவ் சவான், ராஜஸ்தானில் இருந்து சுன்னிலால் கராசியா, தெலங்கானாவில் இருந்து அனில் குமார் யாதவ் மண்டாடி, மேற்கு வங்கத்தில் இருந்து சுஷ்மிதா தேவ், முகமது நதிமுல் மற்றும் ஜகத் பிரகாஷ் நாராயண் லால் நட்டா ஆகியோரும் இன்று பதவியேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

நண்பர்களிடையே கருத்து வேறுபாடு இயல்பு! டிரம்ப் - மோடி குறித்து அமெரிக்க தூதர்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறதா? மன அழுத்தமாக இருக்கலாம்!

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT