இந்தியா

60 ஆண்டுகளாக செய்ய முடியாதவற்றை 10 ஆண்டுகளில் சாதித்துள்ளோம்: பிரதமர் மோடி

DIN

பிகார் மாநிலத்தில் இன்று(ஏப். 7) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணி பிகார் முழுவதும் வெற்றி பெறப்போகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வலுவான அரசு நாட்டுக்காக துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாடு விடுதலையடைந்த பின், 60 ஆண்டுகளாக செய்ய முடியாதவற்றை பத்தே ஆண்டுகளில் சாதித்துள்ளோம்.

’இந்தியா’ கூட்டணி தலைவர்கள் யாரும் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கவில்லை என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. நான் அளித்த வாக்குறுதிகளால் ‘இந்தியா’ கூட்டணி வாயடைத்துப் போயுள்ளது. என்னுடைய நோக்கம் தூய்மையானது என்பதால் வாக்குறுதி அளிக்கிறேன். அதை நிறைவேற்ற கடுமையாக உழைக்கிறேன். ‘இந்தியா’ கூட்டனியில் உள்ளவர்கள், இதை புரிந்து கொள்ள மாட்டார்கள். தேர்தலில் பொய் சொல்லி வாக்கு சேகரிப்பதில் பெயர் பெற்றவர்கள் என்று பேசினார்.

பிகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT