இந்தியா

மதுபானக் கொள்கை முறைகேடு- கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

Sasikumar

தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தில்லி கலால் கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக தில்லி, ஹைதராபாத், சென்னை, மும்பை உள்பட நாடு முழுவதும் 245 இடங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறை, தில்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா உள்பட 15 பேரை கைது செய்தது.

இந்த வழக்கில் கடந்த 15ஆம் தேதி கவிதாவை அமலாக்கத் துறை கைது செய்தது. இதனிடையே அவரது அமலாக்கத் துறை காவல் முடிவடைந்த நிலையில், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கவிதா அண்மையில் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது கவிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு அவா் தரப்பு வழக்குரைஞா் நிதேஷ் ராணா கோரிக்கை விடுத்தாா்.

அவருடைய சிறு வயது மகனின் பொதுத் தோ்வைக் கருத்தில்கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். இதற்கு அமலாக்கத் துறை எதிா்ப்பு தெரிவித்திருந்தது. இதைக் கேட்ட சிறப்பு நீதிபதி, கவிதாவை வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

அதனடிப்படையில் அவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில் கவிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க தில்லி சிறப்பு நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

சூடான உணவுப் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT