கங்கனா ரணாவத்  ANI
இந்தியா

நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க ஹிந்து: கங்கனா

‘எனது நற்பெயரை கெடுக்கும் இதுபோன்ற வதந்திகள் மக்கள் மத்தியில் எடுபடாது’

Ravivarma.s

நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க ஹிந்து என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவரின் குற்றச்சாட்டுக்கு பாஜக வேட்பாளரும் நடிகையுமான கங்கனா ரணாவத் பதிலளித்துள்ளார்.

ஹிமாசல பிரதேசம் மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான விஜய் வடேட்டிவார் பேசுகையில், மாட்டிறைச்சி பிடிக்கும் என்று கங்கனா ஒருமுறை கூறியுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கங்கனா,

“நான் மாட்டிறைச்சி அல்லது எவ்விதமான சிவப்பு இறைச்சியையும் சாப்பிடுவதில்லை. என்னைப் பற்றி முற்றிலும் ஆதராமற்ற குற்றச்சாட்டை பரப்புவது வெட்கக்கேடானது. பல ஆண்டுகளாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்து வாழ்ந்து வருகிறேன்.

எனது நற்பெயரை கெடுக்கும் இதுபோன்ற வதந்திகள் எடுபடாது. மக்களுக்கு தெரியும் நான் பெருமைமிக்க ஹிந்து என்று. அவர்களை தவறாக வழிநடத்த முடியாது. ஜெய் ஸ்ரீராம்.” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் தொல்லை: வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

SCROLL FOR NEXT