முகப்பு
இந்தியா

ஊழல் செய்தவர்கள் சிறை செல்வார்கள்: மோடி

ஊழல் செய்தவர்கள் கட்டாயம் சிறைக்கு செல்வார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Updated On : 8 ஏப்ரல், 2024 at 3:39 PM
பகிர்:

ஊழல் செய்தவர்கள் கட்டாயம் சிறைக்கு செல்வார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் பகுதியில் பேசிய அவர்,

இந்திய நாடுதான் என் குடும்பம். என் நாட்டையும் என் குடும்பத்தையும் ஊழலிலிருந்து காப்பாற்றுவதற்காக நான் பாடுபடுகிறேன். ஊழலை ஒழிக்க வேண்டும் எனக் கூறுகிறேன். ஆனால் இந்தியா கூட்டணி ஊழலைக் காக்க நினைக்கிறது.

எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் சரி, ஊழல் செய்தவர்கள் கட்டாயம் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். இது மோடி அளிக்கும் வாக்குறுதி.

சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டைக் கொள்ளையடிப்பதற்கான உரிமையை காங்கிரஸ் பெற்றது. 2014க்கு பிறகு காங்கிரஸின் கொள்ளையடிக்கும் உரிமை ரத்தாகியுள்ளது. தற்போது அவர்களின் கடை காலியாகவுள்ளது.

அவர்கள் எனக்கு அச்சுறுத்தல்களைத் தரலாம். யார் என்னை காப்பார்கள்? என் நாட்டு மக்கள்தான். என் குடும்பத்தினர்தான் எனக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் எனக் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →