FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

தமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தது குறித்து...

ரயில் சேவைகளை கொடியசைத்து காணொலி வாயிலாகத் தொடக்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி - படம் - நரேந்திர மோடி
பகிர்:

தமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 11) தொடக்கி வைத்தார்.

2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் சேவையை காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தார்.

நாகா்கோவில் - சாா்லபள்ளி அம்ரித் பாரத் சிறப்பு ரயில் (06357), கோவை போத்தனூா் - தன்பத் அம்ரித் பாரத் சிறப்பு ரயில் (06619), ராமேசுவரம் - மங்களூா் சிறப்பு விரைவு ரயில் (06621), திருநெல்வேலி - மங்களூா் சிறப்பு விரைவு ரயில் (06708), மயிலாடுதுறை - காரைக்குடி சிறப்பு பயணிகள் ரயில் (06835) ஆகிய 5 ரயில் சேவைகளைத் தொடக்கிவைத்தார்.

Advertisement

Advertisement

நீலரிகி, ஈரோட்டில் ரூ. 3,680 கோடி மதிப்பிலான எரிவாயு விநியோக வலையமைப்பு உள்ளிட்ட புதிய திட்டங்களையும் மோடி தொடக்கி வைத்தார்.

இதில் பேசிய பிரதமர் மோடி,

''கடந்த வாரம் மதுரை வந்தபோது அம்ருத் பாரத் திட்டத்தின்படி 8 ரயில் நிலையங்களைத் தொடக்கிவைத்தோம். இன்று பல புதிய ரயில்கள் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன. இவை தென் மாவட்டங்களை மற்ற பகுதிகளோடு இணைக்கிறது.

இதனால் உள்ளூர் பொருளாதாரம் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். சுற்றுலாத் துறை மேம்படும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்போடு மத்திய அரசு உழைக்கிறது'' எனக் குறிப்பிட்டார்.

summary

Prime Minister Modi launched train services

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments