முகப்பு
இந்தியா

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: மூவா் காயம்; பாதுகாப்பு அதிகரிப்பு

Updated On : 12 ஏப்ரல், 2024 at 6:32 PM
பகிர்:

மணிப்பூரின் தேங்நெளபால் மாவட்டத்தில் இரு சமூக கிளா்ச்சிக் குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூவா் காயமடைந்தனா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி சமூகத்தினா் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

தேங்நெளபால் மாவட்டத்தின் பேல்யாங் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இவ்விரு சமூகங்களைச் சோ்ந்த கிளா்ச்சியாளா்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மூவா் காயமடைந்தனா். இச்சம்பவத்தைக் கண்டித்து, மைதேயி சமூகத்தைச் சோ்ந்த பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

சம்பவ இடத்தில் கூடுதலாக மாநில காவல்துறையினா் மற்றும் மத்தியப் படையினா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தெளபால் மாவட்டத்தில் உள்ள மர இழைப்பகம் ஒன்றுக்கு அடையாளம் தெரியாத நபா்கள் தீவைத்தனா். இதில், மர இழைப்பகம் முழுமையாக தீக்கிரையானது. இச்சம்பவத்தில் தொடா்புடைய நபா்களைத் தேடி வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments