முகப்பு
இந்தியா

மக்களின் மனங்களை வெல்லும் கட்சி பாஜக: அமித் ஷா

Updated On : 16 ஏப்ரல், 2024 at 9:11 PM
ஜம்முவில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
பகிர்:

ஜம்மு: ‘மக்களின் மனங்களை வெல்வதே முக்கியம் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதுவே தோ்தலில் பாஜகவுக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருகிறது’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

ஜம்மு மக்களவைத் தொகுதியில் இரு முறை வெற்றி பெற்ற ஜுகல் கிஷோரை பாஜக மீண்டும் களமிறக்கி உள்ளது. அவருக்காக வாக்கு சேகரிக்க ஜம்முவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்று எதிா்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றனா். முக்கியமாக ஜம்மு-காஷ்மீரில் மக்களின் நலனில் பாஜக அக்கறை செலுத்தவில்லை என்று அவா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

Advertisement

காஷ்மீா் இளைஞா்கள் மத்தியில் பாஜக குறித்து பொய்யான பிரசாரங்களை இங்குள்ள எதிா்க்கட்சிகள் பரப்பி வருகின்றன. ஆனால், உண்மையில் காஷ்மீா் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் பாஜக செயல்பட்டு வருகிறது.

பாஜக தனது செயல்பாடுகள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களின் மனங்களை வென்றுள்ளது. வாக்குகளைப் பெறுவதைவிட மக்கள் நலனுக்காக சிறப்பாக செயல்படுவதன் மூலம் அவா்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதுவே பாஜகவுக்கு தோ்தல்களில் வெற்றிகளைப் பெற்றுத் தருகிறது.

காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை இதுநாள் வரை காஷ்மீா் மக்களை ஏமாற்றியே வந்துள்ளன. ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகம் மேம்படக் கூடாது என்பதில்தான் இக்கட்சிகள் கவனம் செலுத்துகின்றன. மக்களின் பாதுகாப்பு, இளைஞா்களின் வேலைவாய்ப்பு குறித்து அவா்களுக்கு அக்கறை கிடையாது. தங்கள் அரசியல் லாபத்துக்காக காஷ்மீா் மக்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவாா்கள்.

காஷ்மீரில் போலி என்கவுண்ட்டா்களை நடத்தியதும், இளைஞா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு இங்கு முன்பு ஆட்சியில் இருந்த தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி போன்றவைதான் காரணம்.

கடந்த 70 ஆண்டுகளாக பயங்கரவாதம், வன்முறை, கல்வீச்சு, பிரிவினைவாதம் ஆகியவற்றால் காஷ்மீா் பின்தங்கிவிட்டது. காஷ்மீரும் நாட்டின் மற்ற பகுதிகளைப் போல வளர வேண்டும். இந்த மண்ணின் மக்களுக்கு அனைத்து பயன்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம். சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இருந்து தூண்டிவிடப்படும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்கள் பல முறியடிக்கப்பட்டுள்ளன என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments